ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூலை 16, 2019, 04:35 AM
சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. உடல்நிலையை காரணம் காட்டி அவர் தரப்பில் விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், உடனே சரணடையவும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு ஆம்புலன்சில் வந்த ராஜகோபால் சரணடைந்தார். பின்னர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு,  ராஜகோபாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை  தள்ளி வைத்தது

தொடர்புடைய செய்திகள்

சொந்த ஊரில் ராஜகோபால் உடல் இன்று அடக்கம்...

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடலுக்கு, பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

79 views

ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை மோசம் என தகவல்

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

757 views

பிற செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

ஒட்டன்சத்திரத்தில் கைத்துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

31 views

விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு : அதிகாரிகள் சோதனை நடத்தியதால் சிறிது நேரம் பதற்றம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான புறப்பாடு முனையத்தில், அதிகாலை 3 மற்றும் நான்காவது நுழைவு வாயிலுக்கு இடையே ஏா் அரேபியா நிறுவனஅலுவலகம்அருகே உள்ளஒரு இருக்கையில் கறுப்பு நிற பை ஒன்று நீண்ட நேரமாக இருந்துள்ளது.

13 views

மழைநீரால் தானாவே நிரம்பும் அனந்த சரஸ் குளம்...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம், மழைநீரால் தானாகவே நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

452 views

வாணியம்பாடியில் 3 - வது நாளாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால், பல இடங்களில் வீடுகள் இடிந்து, எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

27 views

விஷப்பாம்புகளுடன் மனு அளிக்க வந்த மக்கள் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் பார்த்திபனூர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

63 views

ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்குள் கொட்டக் கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இயற்கை வளத்தை பாதுகாக்க, ஓட்டல் கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.