பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்

மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
x
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல்  மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை  ரத்து செய்ய கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்த  தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.ஆவின் பால் மருந்து ,எண்ணெய் , பிஸ்கெட் போன்ற பொருட்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு அளித்திருப்பது பாரபட்சமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.பால், மருந்து உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் என்பதால் விலக்கு அளித்திருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அவற்றிற்கும் தடை உத்தரவை  அமல்படுத்தினால் தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று  நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆவின் பாலை பிளாஸ்டிக் உறைக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டுமெனவும் ,பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக  துணி, சணல்,பாக்குமட்டை போன்ற மாற்று பொருட்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.கடுமையான அபராதம் விதிக்காவிட்டால் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை முழுமையாக இருக்காது என்றும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவு காகிதத்தில் மட்டும் இல்லாமல், கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்