11-ஆவது நாள் காவி நிற பட்டு உடுத்தி காட்சி தந்த அத்திவரதர் - 17.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் பதினோராவது நாளில் அத்திவரதர் காவி நிறப் பட்டு உடுத்தி அருள்பாலித்தார்.
11-ஆவது நாள் காவி நிற பட்டு உடுத்தி காட்சி தந்த அத்திவரதர் - 17.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தரிசனம்
x
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் 11வது நாளில், அத்திவரதர் காவி நிற பட்டு உடுத்தி காட்சி தந்தார். விடியற்காலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாலும், போலீசாரின் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்த உற்சவத்தில் 17 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதரை தரிசித்தார் அன்புமணி ராமதாஸ் :




காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அத்தி வரதரை தரிசித்தார். அப்போது, பஞ்ச வண்ண மலர்களால் கோர்க்கப்பட்ட பெரிய மாலை ஒன்றை சுவாமிக்கு சாத்தி வழிபட்டார். இதை முன்னிட்டு, சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு சுவாமியின் மீது சாத்தப்பட்ட மலர்மாலை கொடுக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்டு தரிசனத்தை முடித்து அவர் புறப்பட்டுச் சென்றார். அப்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்