பரமத்திவேலூரில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் - 13 பேர் கொண்ட மத்திய குழு நேரில் ஆய்வு

பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.
பரமத்திவேலூரில் மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் - 13 பேர் கொண்ட மத்திய குழு நேரில் ஆய்வு
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதையொட்டி மத்திய குழுவின் தலைவரும், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளருமான ரஞ்சித் குமார் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் மேம்படுத்தி உள்ள பணிகள்,  மழைநீர் சேகரிப்பு, உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்