சட்டம், நீதி, நிர்வாகம், சிறைத்துறை மானியம் மீதான விவாதம் - குறிப்புகள் இல்லாமல் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்

குறிப்புகள் ஏதும் இல்லாமல் பதிலுரை வழங்கிய அமைச்சர் சண்முகத்தை அமைச்சர்கள் திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்கள்.
சட்டம், நீதி, நிர்வாகம், சிறைத்துறை மானியம் மீதான விவாதம் - குறிப்புகள் இல்லாமல் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்
x
குறிப்புகள் ஏதும் இல்லாமல் பதிலுரை வழங்கிய அமைச்சர் சண்முகத்தை அமைச்சர்கள், திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டினார்கள். சட்டப்பேரவையில் இன்று  சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் சிறைத்துறையின், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு அமைச்சர் சண்முகம் பதிலுரை வழங்கினார். கைகளில் எந்த குறிப்பும் இல்லாமல், புள்ளி விவரத்தோடு, அவர் பேசியதை, பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் ரசித்தனர். அமைச்சர் பேசி முடித்ததும், திமுக உறுப்பினர்கள் சிலர் அமைச்சரை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களும் வாழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்