முதியோர் உதவித்தொகை கேட்டு 300க்கும் மேற்பட்ட முதியவர்கள் போராட்டம்

உதவித்தொகை வழங்க கோரி 300க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முதியோர் உதவித்தொகை கேட்டு 300க்கும் மேற்பட்ட முதியவர்கள் போராட்டம்
x
உதவித்தொகை வழங்க கோரி, 300க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்தனர்.இவர்களில் 213 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், முதியோர் உதவித்தொகை கோரி, மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முதியவர்கள் திரும்பிச்சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்