நாகர்கோவில் அருகே 99 வயதில் முன்னாள் ராணுவ வீரர் மரணம்

நாகர்கோவில் அருகே 100 வது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தினத்தில் முன்னாள் ராணுவ வீரருக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
நாகர்கோவில் அருகே 99 வயதில் முன்னாள் ராணுவ வீரர் மரணம்
x
நாகர்கோவில் அருகே 100 வது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தினத்தில்,முன்னாள் ராணுவ வீரருக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. குமரி மாவட்டம் புத்தேரியை சேர்ந்தவர்முன்னாள் ராணுவ வீரர் காந்திநாத பிள்ளை. இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள், 17 பேரப்பிள்ளைகள் மற்றும் 17 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். இவர் தமது 100 வது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த நிலையில், அதற்காக உறவினர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு காந்திநாத பிள்ளை மரணமடைந்தார். 100 ஆவது பிறந்தநாள், தினத்தில் இவருக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்