10 % இடஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.
10 % இடஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள் எதிர்ப்பு
x
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற 16 கட்சிகள், இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது. பா.ஜ.க. இந்த ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதகமில்லாத வகையில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தால் ஏற்போம் எனத் தெரிவித்தனர். தி.மு.க. வை பொறுத்தவரை, இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தது. கூட்டத்தி்ல் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மத்திய அரசால் தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்ட சட்டம் என சாடினார். இந்த இடஒதுக்கீட்டை தமிழக அரசு எந்த நிலையிலும் ஏற்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்