மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பம் : தி.மு.க. சார்பில் மூன்றாவதாக என். ஆர். இளங்கோ போட்டி

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் மேலும் ஒருவர் மனு தாக்கல் செய்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
x
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தொமுசவை சேர்ந்த சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் 2 இடங்களுக்கு மனு தாக்கல் செய்துள்ளனர். எஞ்சிய ஒரு இடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவுக்கு ஒரு  ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் 
2 பேரும், வைகோவும் மனு தாக்கல் செய்தனர். 

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் தண்டனை பெற்ற வைகோவின் மனு தார்மீக அடிபடையில் ஏற்கப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுடன் ஆலோசனை கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 3 வது வேட்பாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வைகோ மனு ஏற்று கொள்ளப் படாவிட்டால் மாற்று நடவடிக்கையாக இளங்கோ மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுகவுக்கான 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.  அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் திமுகவின் புதிய வியூகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்