இறகு பந்து போட்டிக்கு கூடுதல் விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை

ஊட்டியில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பரிசளித்தார்.
இறகு பந்து போட்டிக்கு கூடுதல் விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் - அன்புமணி கோரிக்கை
x
ஊட்டியில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரிசளித்தார்.  ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு போன்ற பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கிவிட்டு பேசிய அன்புமணி, மாவட்டங்களில் கூடுதல் விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுக்கோள் வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்