தமிழக அரசு விரைவு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி எழுத்து ஸ்டிக்கர் நீக்கப்பட்டது - போக்குவரத்துத் துறை அறிக்கை

தமிழக அரசு விரைவு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி எழுத்து ஸ்டிக்கர் உடனடியாக சரி செய்யப்பட்டதாக தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசு விரைவு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி எழுத்து ஸ்டிக்கர் நீக்கப்பட்டது - போக்குவரத்துத் துறை அறிக்கை
x
தமிழக அரசு விரைவு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி எழுத்து ஸ்டிக்கர் உடனடியாக சரி செய்யப்பட்டதாக தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. இந்தி ஸ்டிக்கர் குறித்து கண்டனம் தெரிவித்த, திமுக எம்பி கனிமொழி,  தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், வெளிமாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரே ஒரு பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த இந்தி ஸ்டிக்கர், அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்