ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை குறைப்பு : ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்ததால் பரபரப்பு
பதிவு : ஜூலை 07, 2019, 04:30 PM
எழும்பூர் முதல் பல்லாவாரம் வரை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கடற்கரை முதல்  தாம்பரம் செல்லக்கூடிய ரயில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30  வரை ரத்து செய்யப்பட்டது.  இதேபோல் தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்லக்கூடிய ரயில் அதிகாலை முதல் 8.45 வரை இயங்காது என  ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. பயணிகளின் வசதிக்காக கடற்கரையிலிருந்து கோடம்பாக்கம் வரை 20 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் , தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 40 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான  பயணிகள்  கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் குவிந்ததால் அங்கு கூட்டம் அலை மோதியது.  ரயிலில்  இடம் கிடைக்காமல் பயணிகள்  படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். சுவர் ஏறி குதித்தும், தண்டவாளத்தில் இறங்கிய படியும் பயணிகள் அங்கு இங்குமாக சென்றதால் கோடம்பாக்கம் ரயில் நிலையம் பரப்பாக காணப்பட்டது.  இந்நிலையில், மதியம் 2.30 மணிக்கு மேல் ரயில் சேவை சீரானது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1515 views

பிற செய்திகள்

உலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள்

இந்த உலக கோப்பை போட்டியின் நட்சத்திர நாயகர்கள்... கவனிக்க வேண்டிய தகவல்கள்

198 views

15வது நாளாக அருள்பாலிக்கும் அத்திவரதர் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை

காஞ்சிபுரத்தில் 15 வது நாளாக அத்திவரதரை தரிசிக்க ஏராளமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

62 views

"சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்" - கடம்பூர் ராஜூ

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

23 views

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்... ஒசூரில் நடந்த விபரீதம்

ஒசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய போது அது திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1242 views

கிடப்பில் போடப்பட்ட சென்னை- புதுச்சேரி - கடலூர் வரையான ஈ.சி.ஆர். தடம்...

சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரையான ஈ.சி.ஆர் மார்க்க ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

28 views

டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்

டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.