நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம்
பதிவு : ஜூலை 07, 2019, 11:40 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம்  வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் உள்ளிட் 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது, தேர் 4 மாட வீதிகளையும் வலம் வர பக்தர்கள் நம்ச்சிவாய என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னீட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோலமிட்டு  நடனம் ஆடியபடி வந்தனர்.


தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள பூஜைகள்  நடைபெறும். இதனைத்தொடர்ந்து நாளை காலை முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணியளவில் ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெறும். தேர் திருவிழாவை முன்னிட்டு 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1541 views

பிற செய்திகள்

சந்திரகிரகணம் - காண திரண்ட மக்கள் : பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சந்திரகிரகணத்தை ஒட்டி, சென்னை பிர்லா கோளரங்களில் சந்திரகிரகண காட்சிகளைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

45 views

ராஜகோபால் தனியார் மருத்துவமனை​யில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 views

"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

40 views

தபால்துறை தேர்வு ரத்து : பிரதமர் மோடி மற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி - திருச்சி சிவா

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்புக்கு திருச்சி சிவா நன்றி தெரிவித்து கொண்டார்.

10 views

"தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை - "டி.டி.வி.தினகரன்

மத்திய அரசோடு சுமூக உறவு வைத்திருப்பதாக கூறும் தமிழக அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

13 views

வனப்பகுதியில் இருந்து வழிதவறி சென்ற பெண் புள்ளிமான் - மானை மீட்டு சிகிச்சை அளித்து வரும் வனத்துறை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கம்பிவேலியில் சிக்கித்தவித்த பெண் புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.