அத்திவரதர் ஆறாவது நாள் வைபவம் - இளம் நீல வண்ண பட்டாடையில் அருள்பாலித்த அத்தி வரதர்

ஆறாவது நாள் வைபத்தில் அத்தி வரதர் இளம் நீல வண்ண பட்டாடை உடுத்தி தாமரை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் ஆறாவது நாள் வைபவம் - இளம் நீல வண்ண பட்டாடையில் அருள்பாலித்த அத்தி வரதர்
x
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆறாவது நாளான இன்று அத்தி வரதர் இளம் நீல வண்ண பட்டாடை உடுத்தி தாமரை மாலையுடன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்தி வரதரை தரிசனம் செய்ய, அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். விடுமுறை தினமான இன்று மட்டும் 1 லட்சத்திற்கும்  மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5  நாட்களில் மட்டும் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்