எழுத்தாளரும் கருணாநிதியின் நண்பருமான சேலம் வேங்கடசாமி காலமானார்

எழுத்தாளரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நண்பருமான சேலம் வேங்கடசாமி காலமானார்.
எழுத்தாளரும் கருணாநிதியின் நண்பருமான சேலம் வேங்கடசாமி காலமானார்
x
எழுத்தாளரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நண்பருமான சேலம் வேங்கடசாமி காலமானார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த வேங்கடசாமி, வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். 90 வயதான எழுத்தாளர் வேங்கடசாமி, நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். அவரது உடல் சேலம் காந்தி சாலையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.சேலம் தமிழ் சங்கத்தினர், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சேலம் வேங்கடசாமி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் :

சேலம் வேங்கடசாமி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கருணாநிதியின் பேரன்புக்கும் வற்றாத பாசத்திற்கும் பாத்திரமான  எழுத்தாளர் சேலம் வேங்கடசாமி என குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்