இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி மாணவிகள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி மாணவிகள் போராட்டம்
x
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆண்டு படித்த மாணவிகள் 300க்கும் மேற்பட்டோருக்கு மடிக்கணினி வழங்கவில்லை. தற்போது, மடிக்கணினிகள் வழங்கும் விழாக்கள் நடந்து வருவதால் தங்களுக்கும் அவற்றை வழங்க வலியுறுத்தி சுமார் 100 மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்