ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக உயிரிழந்த பிரசன்னாவின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். செய்தியாளர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மறைந்த பிரசன்னாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Next Story