செல்போன் கோபுரம் அமைப்பதற்காக அனுமதியின்றி வெடிவைத்து பாறைகள் தகர்ப்பு

ஈரோடு அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்காக அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து அகற்றியதால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன.
செல்போன் கோபுரம் அமைப்பதற்காக அனுமதியின்றி வெடிவைத்து பாறைகள் தகர்ப்பு
x
ஈரோடு அருகே செல்போன் கோபுரம் அமைப்பதற்காக, அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து அகற்றியதால், அருகில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன. பாசூர் அருகே உள்ள குமாரசாமிபுரத்தில், தனியார் நிறுவனம் செல்போன்  கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது, பாறைகள் அதிகம் இருந்ததால், விதிகளை மீறி வெடி வைத்து  பிளந்து, அகற்றினர். இந்த நிலையில், பாறைக் கற்கள் சிதறி விழுந்ததால், ஓட்டு வீடுகள், கூரைகள், கோயில் ஆகியன கடும் சேதம் அடைந்தன. இதையடுத்து, ஊர்ப் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்