பட்டா மாறுதலுக்கு 5 மரக்கன்றுகளை நட்டு வளருங்கள் - கரூர் மண்டல துணை தாசில்தார்

கரூர் மண்டல துணை தாசில்தார் மோகன்ராஜ் தமது அலுவலக அறையில் வைத்திருக்கும் அறிவிப்புகள் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
பட்டா மாறுதலுக்கு 5 மரக்கன்றுகளை நட்டு வளருங்கள் - கரூர் மண்டல துணை தாசில்தார்
x
கரூர் மண்டல துணை தாசில்தார் மோகன்ராஜ், தமது அலுவலக அறையில் வைத்திருக்கும் அறிவிப்புகள் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது. அதில் தனது கையொப்பம் விலை மதிக்க முடியாதது, அதை விலை பேசாதீர், கையூட்டு கொடுப்பதும் கொள்வதும் குற்றமாகும் என்று ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் கோருபவர்கள் ஐந்து மரக்கன்றுகளை நட்டு அதற்குரிய ஆதாரத்தை வழங்கினால் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வைத்துள்ளார். இவை பொதுமக்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்