17 வயது பள்ளி மாணவி தாக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருப்பூரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை குருநாதன் என்பவர் கண்ணாடி பாட்டிலால் கடுமையாக தாக்கிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
17 வயது பள்ளி மாணவி தாக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
x
திருமணம் செய்ய மறுத்ததையடுத்து திருப்பூரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை,  குருநாதன் என்பவர் கண்ணாடி பாட்டிலால் கடுமையாக தாக்கிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை முயற்சிக்காக ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் மாணவியை தாக்கியதற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும்  5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்