வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் - உறவினர் கைது

கும்பகோணத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் - உறவினர் கைது
x
கும்பகோணம் அருகே மேல கொருக்கை கிராமத்தில் வசித்து வந்தவர் வசந்தி. இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி வீட்டில், மர்மமான முறையில்  கொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டின்  பீரோவில் இருந்த நகைகள் மாயமாகின. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், வசந்தி வீட்டிற்கு அருகில் வசித்து வரும் உறவினர் பாலமுருகனிடம் விசாரித்தபோது,முன் விரோதம் காரணமாக வசந்தியை அடித்துக் கொன்றதாகவும், கொலையை திசை திருப்ப  நகைகளை பீரோவில் இருந்து எடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து பாலமுருகனை கைது செய்த போலீசார், 15 சவரன்  நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்