"கடல் அலையின் வேகம் அதிகமாக இருக்கும்"

தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதிகளில் நாளை இரவு 11.30 மணி வரை 3 புள்ளி 8 மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் வேகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் அலையின் வேகம் அதிகமாக இருக்கும்
x
தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு திசையிலிருந்து  மணிக்கு காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் எனவும்  அரபிக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இதனையடுத்து, கேரள கடற்கரையோரத்தில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கும் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் கேரள அரசு தடை விதித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்