மகாகவி பாரதியாரின் இல்லம் பராமரிக்கப்படுமா..? அரசு அலட்சியம் காட்டுவதாக புகார்

பொக்கிஷமாக பேணி பாதுகாக்கவேண்டிய மகாகவி பாரதியாரின் இல்லத்தை மீட்டெடுக்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
x
சுதந்திர போராட்டம் மட்டுமின்றி பெண் விடுதலை மீதும் தீரா பற்று கொண்டிருந்தவர், பாரதியார். இன்றும் பாரதியாரின் மேற்கொள்களை சுட்டிக்காட்டாத எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை நம்மால் பார்க்க முடியாது.

மகாகவி பாரதி, கடந்த 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் உள்ள ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தார். இங்கு அவர் பல நூல்களை எழுதியதாக கூறப்படும் நிலையில், பாரதியாருக்கு அருங்காட்சியம் மற்றும் ஆய்வு மையம் அமைத்திருக்கிறது, புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை பாரதியாரின் படைப்புகள், பாரதியாரின் அரிய புகைப்படங்கள், நூல்கள் போன்றவை காட்சி படுத்தப்பட்டிருக்கும் இங்கு வருகை தர தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணியை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் புதுச்சேரி அரசு ஒப்படைத்தது. இதற்காக ஒரு கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. கட்டிடம் சீரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளே நிறைவடைந்த நிலையில், கட்டிடத்தின் காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்தும் காட்சியளிக்கின்றன. பாரதியின் இல்லத்தை உரிய முறையில் பாரமரிக்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இலக்கியமானாலும் சரி. மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் சரி. நீங்கா இடம்பெற்றிருக்கும் பாரதியின் புகழை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்த செல்ல வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறக் கூடாது என்பதே அனைவரது விருப்பம்.

Next Story

மேலும் செய்திகள்