கணவன் காணவில்லை என மனைவி புகார் : மாயமானதாக கருதப்பட்டவர் கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கர்ப்பிணி மனைவி கைது செய்யப்பட்டார்.
கணவன் காணவில்லை என மனைவி புகார் : மாயமானதாக கருதப்பட்டவர் கொலை
x
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன், கடந்த ஏப்ரல் மாதம் மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி பாக்கியலட்சமி காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், முருகனின் கைப்பேசி வெகுநாட்களுக்கு பிறகு, பெங்களூரில் இயங்கியதை கண்டுபிடித்து அங்கு விரைந்தனர். அங்கிருந்த பெண் ஒருவர், மயிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைப்பேசியை வழங்கியதாக தெரிவித்தார்.  இதனையடுத்து முருகன் குடும்பத்தாரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முருகனின் உறவினரான கலியமூர்த்திக்கும், முருகன் மனைவி பாக்கியலட்சுமிக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. இதற்கு முருகன் இடைஞ்சலாக இருந்ததால் கலியமூர்த்தி தமது நண்பருடன் சேர்ந்து முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கர்ப்பிணியாக உள்ள முருகனின் மனைவி பாக்கியலட்சுமியையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்