மீனம்பாக்கத்தில் மீண்டும் தொடங்கியது ரயில் சேவை

மெட்ரோ ரயில் உயர் மின் அழுத்த கம்பி சீரமைப்பு
மீனம்பாக்கத்தில் மீண்டும் தொடங்கியது ரயில் சேவை
x
உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்யப்பட்டதால், சென்னை மீனம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மீனம்பாக்கம் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் உயர்மின் அழுத்த மின்கம்பியில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் ரயில் மேற்கொண்டு இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. இதனால் மீனம்பாக்கத்தில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்லக்கூடிய ரயில்கள், நங்கநல்லூர்  ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர். இதனிடையே உயர்மின் அழுத்த கம்பி சரிசெய்யப்பட்டு, மீண்டும் தற்போது, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

Next Story

மேலும் செய்திகள்