மேம்பாலத்திற்கு சென்ற அரசுப் பேருந்து சிறை பிடிப்பு

பாலத்திற்கு கீழே பேருந்தை இயக்க வலியுறுத்தல்
மேம்பாலத்திற்கு சென்ற அரசுப் பேருந்து சிறை பிடிப்பு
x
கோவை அருகே மேம்பாலத்தில் சென்ற அரசுப் பேருந்து சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் சென்றுவிடுவதால், கிணத்துக்கடவு கிராம மக்கள் பேருந்து கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மேம்பாலத்தில் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பாலத்திற்கு கீழே பேருந்து இயக்கப்படும் என்று பேருந்தின் ஓட்டுனர் உறுதியளித்ததை அடுத்து பேருந்து விடுவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்