பெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஆசிரியர் கைது - ஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

மன்னார்குடியை கூனமடை கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ தனது உறவினரான சுரேஷ் என்பவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்
பெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஆசிரியர் கைது - ஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
x
மன்னார்குடியை கூனமடை கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ தனது உறவினரான சுரேஷ் என்பவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சுரேஷ் காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து பாலியல் உறவு மேற்கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து வழக்கப்பதிவு செய்த போலீசார் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியரான சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ், தனது உறவினர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்