கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?

ஆன்-லைன் வழியாக, கடந்த 23ம் தேதி நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதால், இதன் பின்னணியில் முறைகேடுகளும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?
x
கடந்த 23 ம் தேதி காலை 814 கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு, ஆன்-லைனில் நடைபெற்றது. ஆனால், இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில், தேர்வு எழுதிய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல சந்தேகங்களை முன்வைக்கின்றனர். 30 ஆயிரம் பேருக்கு ஆன்-லைன் வழியில் போட்டித் தேர்வை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்றும், தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் சரியானது தானா என்பதை உறுதி செய்வதற்கு எங்கே வழி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மறுதேர்வு மீண்டும் ஆன்-லைன் வழியில் நடைபெறுமா? அல்லது பழைய நடைமுறையில் நடக்குமா என்றும், போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை தேர்வு மையங்களாக தேர்வு செய்தது ஏன்? என்றும் தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமும், அமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்