எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை தமிழக அரசு மத்திய எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷ்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை தமிழக அரசும், மாநில சுகாதாரத் துறையும், மத்திய எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை தமிழக அரசு மத்திய எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வில்லை - நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷ்
x
மதுரையில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் தாக்கியதில் விவேகானந்த குமார் என்பவர் உயிரிழந்தாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவேகானந்த குமாரின் மனைவி கஜப்பிரியா, அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் கஜப்பிரியாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷ் மற்றும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேஷ், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை தமிழக அரசும், மாநில சுகாதாரத் துறையும், மத்திய எய்ம்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வில்லை என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்