ஏ.என்.32 விமானம் விபத்து சம்பவம் : உயிரிழந்த தமிழக வீரர் வினோத் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

அருணாச்சலத்தில் நடந்த ஏ.என் 32 விமானம் விபத்தில் இறந்த தமிழக வீரர் வினோத்தின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
x
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3ஆம் தேதி விபத்துக்குள்ளானது. 17 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு, அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராத்தில் விமான பாகங்கள், வீரர்களின் உடல் மீட்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. அந்த விபத்தில் இறந்த தமிழக வீரர் வினோத்தின் உடல் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. வீரரின் உடலுக்கு விமான படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது சொந்த ஊரான சிங்காநல்லூருக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. இதையடுத்து, முழு ராணுவ மரியாதையுடன், 33 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர் வினோத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.  
 

Next Story

மேலும் செய்திகள்