தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் கைது

தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை போலீசார் கைது செய்ததால் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் கைது
x
தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை போலீசார் கைது செய்ததால், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை நிர்மலா நகரில் கோவில் கட்ட அனுமதி கோரி இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த‌து. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க வந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை வரும் வழியிலே போலீசார், கைது செய்த‌னர். அவரது கைதை கண்டித்து, இந்து முன்னணியினர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்