சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.
சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்
x
ஆசியாவிலேயே அதிக ரோஜா பூ ரகங்கள் உள்ள பூங்காவாக ஊட்டி பூங்கா உள்ளது. இங்கு பாரம்பரிய ரோஜாக்கள், ஃப்லோரி,  ஃபான்டா, மினி ஏச்சர், ஹைபிரிட் இருவண்ண ரோஜாக்கள்  என 4 ஆயிரம் வகை ரோஜாக்கள் உள்ளன. தினமும் ஊட்டிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசித்து செல்ல தவறுதில்லை. இந்நிலையில் பல சுற்றுலா பயணிகள் தங்கள் வீடுகளில் வளர்க்க ரோஜா கன்றுகளை கேட்பதால், தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள், மற்றும்  25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்