கோவையில் 7 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை : தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர்களா என விசாரணை

கோவையில் 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
கோவையில்  7 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை : தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர்களா என விசாரணை
x
இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து,  இந்தியாவில், தீவிரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கேரளாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 7 டி.எஸ் பி தலைமையில் நடைபெற்று வரும் சோதனையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இவர்களின் சமூக வலைதள பக்கங்களில், இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகளை சம்பந்தப்படுத்துவது போல விவரங்கள் இருந்ததாகவும், இதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.இதேபோல, ஏற்கனவே கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும், சோதனை நடைபெற்று வருகிறது.சோதனை நடைபெற்று வரும் அனைத்து வீடுகளிலும் கடந்த 6 மாதமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்