தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை காட்டில் தீ விபத்து

சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது
தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை காட்டில் தீ விபத்து
x
சென்னை, தாம்பரத்தை அடுத்த  பீர்க்கன்கரணை காட்டு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கோடையின் தாக்கத்தால் மரங்கள் பட்டுபோய் இருந்ததாலும் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த யூகலிப்டஸ் மரங்கள் எரிந்து சேதமானதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்