வட இந்தியாவில் கடுமையான வெப்பம் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி : உரிய இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை

கோவையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட 4 பேர் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
வட இந்தியாவில் கடுமையான வெப்பம் காரணமாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி : உரிய இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை
x
கோவை மற்றும் குன்னூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசி, அலகாபாத், கயா, திரிவேணி சங்கமம்  மற்றும் ஆக்ராவுக்கு ஒரு குழுவினர் சென்றுள்ளனர். காசி உள்ளிட்ட பகுதிகளில் புனித பயணத்தை முடித்து விட்டு, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் பிற்பகலில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், கடும் வெப்பம் காரணமாக மாலை 5 மணி அளவில் ஜான்சி ரயில் நிலையத்தில் பாலகிருஷ்ணன் சுருண்டு விழுந்து இறந்துள்ளார். அவரை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அதே ரயில் பயணம் செய்த சுப்பையா உள்ளிட்ட மற்ற 3 பேரும் கடும் வெப்பம் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்