ரூ. 3000 லஞ்சம் - பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது...
வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது.
சென்னையில் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்காக 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். கடந்த 8 -ம் தேதி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் மடிப்பாக்கத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மறுநாள் இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை ஒப்படைத்த போதும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமாதேவி 3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் கண்ணண் புகார் அளித்தார். இதனையடுத்து 3 ஆயிரம் ரூபாயை பூமாதேவியிடம் கண்ணன் அளிக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.
Next Story