கொப்பரை தேங்காய் ஆதார விலை உயர்வு : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

கொப்பரை தேங்காய்களுக்கான அடிப்படை ஆதார விலையை கிலோவுக்கு 90 முதல் 95 ரூபாய் வரை வீதம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொப்பரை தேங்காய் ஆதார விலை உயர்வு : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
x
கொப்பரை தேங்காய்களுக்கான அடிப்படை ஆதார விலையை, கிலோவுக்கு 90 முதல் 95 ரூபாய் வரை வீதம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழக சந்தைகளில் கொப்பரைத் தேங்காய் கிலோ 82 ரூபாய் வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கொப்பரை தேங்காயின் விலை நிலையற்ற தன்மையாக இருப்பதாகவும்,  பெரும்பாலான விவசாயிகள் இதனால் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் லாபமடையும் நோக்கில், கொப்பரை தேங்காய்க்களுக்கு நிலையான கொள்முதல் விலையை, கிலோவுக்கு 90 முதல் 95 ரூபாய் வரை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்