எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
எம்எல்ஏ பெரியகருப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ  பெரிய கருப்பன், பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து கேள்வி கேட்டதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். எம்எல்ஏ பதவியை தவறாக பயன்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எந்த வித முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்