ஒற்றை மக்னா யானை தாக்கியதில் விவசாயி பலி

விவசாயி ஒருவரின் கை, கால்களை முறித்தது மக்னா
ஒற்றை மக்னா யானை தாக்கியதில் விவசாயி பலி
x
தேனி மாவட்டம் பெரம்பு பட்டி ஓடை பகுதியில் இரவு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த அய்யாவு என்ற முதியவரை மக்னா என்ற ஒற்றை யானை தாக்கியுள்ளது. அதில் அய்யாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் மக்னா யானை தாக்கியதில் குப்புசாமி என்பரின் கைகள் மற்றும் கால்களில் எலும்புகள் முறிந்தன. அதே பகுதியில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த 2 ஆடுகள் மேக்னா யானை தாக்கியதில் சம்பவட இடத்திலேயே பலியானது. இந்த நிலையில் அய்யாவு உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முயன்ற போலீசாரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பொதுமக்களை தாக்கி வரும் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்