கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வேண்டும் - அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை.
கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வேண்டும் - அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை
x
நலிவுற்று வரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு, அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடலூரில் புதியதாக கட்டப்பட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் கட்டிடத்தை அதன் மாநில செயலாளர் முத்துப்பாண்டியன் திறந்து வைத்தார்.  அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நலிவுற்ற கடன் சங்கங்களுக்கு, அரசு நிதி உதவி வழங்கி காப்பாற்ற வேண்டும் என்றும், கூட்டுறவு பணியாளர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்