யானை தாக்கி முதியவர் படுகாயம் : ஊருக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில், ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யானை தாக்கி முதியவர் படுகாயம் : ஊருக்குள் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில், ஒற்றை யானை தாக்கியதில் முதியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஊசிமலை கிராமத்தில் பீன்ஸ் தோட்ட பாதுகாப்புக்காக சென்ற 62 வயதான கெம்பன் என்ற முதியவரை ஒற்றை யானை தாக்கியது. அதில் இடுப்புப் பகுதியில் பலத்த அடிபட்ட அவர், சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கூறிய அப்பகுதி மக்கள், யானையை வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்