திருச்செந்தூர் அருகே மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை

திருச்செந்தூர் அருகே மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே மகனை கொன்று விட்டு தந்தை தற்கொலை
x
திருச்செந்தூர் அருகே பழையகாயல் ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த முத்துமாலை மகன் பெருமாள். கூலி தொழிலாளியான இவருக்கு மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இதில் 2வது மகன் முத்துராஜா, நடக்கவும் பேசவும் இயலாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில், முத்துராஜாவை அவரது தந்தையே கவனித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனக்கு பிறகு மகனை கவனிக்க ஆள் இல்லையே என்ற ஏக்கத்தில் இன்று காலை தனது வீட்டில் முத்துராஜாவை கழுத்தை நெறித்து கொன்று விட்டு, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சென்ற போலீஸார், இருவரது சடலத்தையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையே மகனைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்