கொள்ளிடத்தில் தாயாரை தாக்கிய பிரபல ரவுடி : தட்டிக் கேட்ட மகன் வெட்டிக்கொலை

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொள்ளிடத்தில் தாயாரை தாக்கிய பிரபல ரவுடி : தட்டிக் கேட்ட மகன் வெட்டிக்கொலை
x
நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொள்ளிடம் பரவங்காட்டை சேர்ந்தவர் நடராஜமணி என்பவர், சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் ஊருக்கு வந்த நிலையில் நேற்றிரவு நடராஜமணியின் தாயார் தனத்திடம் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் குடிபோதையில் தகராறு செய்து, அவரைப் பிடித்து தள்ளியதில் அவர் காயமடைந்தார்.இதுதொடர்பாக நடராஜமணி, கார்த்திக்கிடம் கேட்டதாகக் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது நண்பர் சத்தியாவுடன் சேர்ந்து நடராஜமணியை அரிவாளால் வெட்டியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீஸார், கார்த்திக், சத்தியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்