கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது
x
திருத்தணி அருகே நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவி முனியம்மாள். முருகேசன், அடிக்கடி குடித்துவிட்டு முனியம்மாளுடன் சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்,  நேற்றும் முருகேசன் முனியம்மாளை அடித்ததாகத் தெரிகிறது. இதையறிந்த முனியம்மாளின் சகோதரர் ஏழுமலை, அண்ணி ஷீபா ஆகியோர் கொல்லாலகுப்பம் கிராமத்தில் இருந்து வந்துள்ளனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீஸார், முனியம்மாள் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்