மதுரை பேருந்து நிலைய தடுப்புவேலி சரிந்ததால் பரபரப்பு

மதுரையில் பேருந்து நிலைய கட்டிட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தடுப்பு வேலி திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பேருந்து நிலைய தடுப்புவேலி சரிந்ததால் பரபரப்பு
x
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அடுக்குமாடி வணிக வளாகத்துடன் கட்டப்பட உள்ளது. இதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன், பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, 50அடிக்கும் மேலாக அங்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய ஷாப்பிங் வணிக வளாகம் இருந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியானது, சுமார் 100 அடி நீளத்திற்கு திடீரென  சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதனிடையே, கட்டிட பணிகள் தரமானதாகவும், முறையாகவும் நடைபெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்