விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மின் தடையைக் கண்டித்து உதவி பொறியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
x
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின் தடையைக் கண்டித்து உதவி பொறியாளரை முற்றுகையிட்டு  பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அங்குள்ள  ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் கடந்த 6 மாதமாக சீரமைப்பு பணிகள்  நடைபெற்று வருவதால், முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மின் தடை காரணமாக குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என்றும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த  ஊ.மங்கலம் உதவி மின் பொறியாளரையும் முற்றுகையிட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்