முதல்வர் பொறுப்பு ஏற்றார், ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல்வர் பொறுப்பு ஏற்றார், ஜெகன்மோகன் ரெட்டி
x
ஆந்திர முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி, தலைநகர் அமராவதியில், இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய். எஸ். ஆர் காங்கிரஸ், இமால வெற்றி பெற்றிருந்தது. ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆந்திராவில், 5 துணை முதலமைச்சர்களை நியமித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி,  தனது அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட வில்லை. 



Next Story

மேலும் செய்திகள்