2-வது நாளாக வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பிரதமர் மோடி பொய்களை கூறி தேர்தலில் வெற்றி பெறுவதாக கா​ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
2-வது நாளாக வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
x
 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, சுமார் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள் பயணமாக அவர் கேரளா சென்றுள்ளார். முதல் நாளான நேற்று கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 இடங்களில் பொதுமக்களை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். இந்நிலையில்  2- வது நாளான இன்று வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டா சென்றார். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி பொய்களை கூறி தேர்தலில் வெற்றி பெறுவதாகவும்,  நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் அவர்  ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்