ஏழு ஆண்டுகளாக நடக்கும் ஓராசிரியர் பள்ளி

ஒசூர் அருகே, கடந்த 7 ஆண்டுகளாக அரசு தொடக்கப்பள்ளி ஒன்று, ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருவதால், மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.
x
ஒசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியம், கொப்பகரை ஊராட்சியில் ஆர். ரத்தினகிரி கிராமத்தில்  2005 ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த இந்த பள்ளியில்,  3 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். அதன் பின்னர்  2012 ஆம் ஆண்டு முதல் ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. அதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதுடன், தற்போது 27 மாணவர்களே படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக ஒரே ஆசிரியர், ஒரே வகுப்பில் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடம் நடத்துவதால் வேதனை அடைந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.  உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளியை தரம் உயர்த்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்