வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் பிரசவமா?

கோவையில் மருத்துவர்கள் இன்றி வாட்ஸ் அப் மூலம் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
x
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மனைவி நித்யா கருத்தரித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3ஆம் தேதி நித்யாவுக்கு பிறந்த பெண் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த குழந்தை அங்குள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனிடையே தனக்கு அளித்த தவறான சிகிச்சையால் தான் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரசவத்தின் போது உரிய பயிற்சியில்லாத உதவி மருத்துவர்கள் வாட்ஸ் அப் மூலம் தனக்கு பிரசவம் பார்த்ததாகவும் நித்யா அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உரிய விசாரணை நடத்தப்படாததை தொடர்ந்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆனால் பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி உரிய முறையில் பிரியாததால் தான் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்